நாள்: 21.01.2008
நான் 17.01.2008 நாளிட்ட "தி இந்து" ஆங்கில நாளிதழில் கீழ்காணும் செய்தியினைப் படிக்க நேர்ந்தது. அதில் இலண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களின் ஒரு குறிப்பிட்ட கூட்டமைப்பின் தலைவரான இவான் பெத்ரோபிள்ளை என்பவர் பின்வருமாறு அறிக்கைவிடுத்திருந்தார்:
"தமிழர்கள் அனைவரும் இலங்கை அரசால் இயக்கப்படும் வானூர்திகளைப் புறக்கணிக்க வேண்டும். ஏனெனில், இலங்கை அரசு வானூர்திகளை நம்மைப் போன்ற புலம் பெயர்ந்த தமிழர்களே பெருமளவில் பயன்படுத்துகின்றனர். அதனால் இலங்கை அரசிற்கு ஓர் ஆண்டிற்குத் தமிழர்கள் ஈட்டித்தரும் வருவாய் 1,20,00,000 பவுண்டுகளாகும்(12 million pounds). தமிழர்களால் அடையும் இவ்வருவாயினை அவர்கள் தமிழர்களை அழிப்பதற்கே பயன்படுத்துகின்றனர். மேலும், இலங்கைக்குச் சுற்றுலா பயணம் செல்வதையும் தவிர்ப்பீராக".
நான் தற்போது என்ன வேண்டுகோள் விடுக்க விழைகிறேன் என்றால் இந்தியத் தமிழர்களாகிய நாமும் நம் இலங்கைத் தமிழ் உடன்வயிற்றோர்களுக்கு(சகோதரர்களுக்கு) கை கொடுப்போம். நம்மில் பலர் சில ஆயிரம் ரு°பாய்களைச் சேமிக்கும் பொருட்டு, சிங்கப்பூர், சவுதி அரேபியா மற்றும் பல ஆசிய நாடுகளுக்குச் செல்லும்போது இலங்கை அரசு வானூர்திகளைப் பயன்படுத்துகின்றோம். இனி, அதனை முற்றிலும் தவிர்த்து நம் இந்திய அரசு வானூர்திகளையே பயன்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதனால் நாம் நம் தமிழ் இனத்தை காப்பது மட்டுமின்றி நம் அரசிற்கும் பெருத்த வருவாயினை ஈட்டித்தருகிறோம். தமிழர்கள் அனைவரும் இதில் தன்னல நோக்குடன் செயல்படாமல் பொதுநல நோக்குடன் செயல்படுதல் சாலச் சிறந்ததாகும்.
நம் இலங்கைத் தமிழ் உடன்வயிற்றோர்களின் நலனிற்காக நாம் அனைவரும் ஒன்று கூடி அறவழியில் இச்சிறு உதவியினை உளமாரச் செய்வோமாக!
அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
Subscribe to:
Post Comments (Atom)
Historia de Silapathikaram - Una Epopeya Famosa del Idioma Tamil
Fecha: 27 de Julio 2022 Soy una mujer de India que es una hablante de Tamil, el idioma muy antiguo. La mayoria de los hablantes de Tamil ...
-
Date: 08.01.2007 Let us see an interesting information on, one of the erstwhile chief ministers of the state of Tamil Nadu in India, Dr....
-
Date: 07.11.2007 In this post, I would like to give a brief account on my most favourite temple, which is, Lord Annamalayaar (or) Lor...
-
Date: 25th November 2008 La fecha: 25 de Noviembre 2008 In this post, I wish to share my meagre knowledge in Spanish with you all in a...
5 comments:
வணக்கம் சகோதரி
தங்களின் விரிவான, தமிழுணர்வும், சகோதரத்துவமுமான பின்னூட்டம் கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த நூல் குறித்த மேலதிக விபரங்களை கீழ்க்காணும் பதிவில் இட்டிருக்கின்றேன்.
http://kanapraba.blogspot.com/2008/01/blog-post_21.html
இந்த நூலை சென்னை புத்தகக் கண்காட்சியில் 243 ஆம் இலக்கக் கடையில் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது கீழ்க்காணும் முகவரிக்குச் சென்றால் பெற்றுக் கொள்ளலாம்:
32/9 Arcot Road, Kodambakkam
Chennai
PH: 91 44 2372 3182
E-mail:mithrabooks@gmail.com
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the GPS, I hope you enjoy. The address is http://gps-brasil.blogspot.com. A hug.
greetings from Norway!
tht is really nice to read.mei sillirthathu......indru varai thann udan pirapana indhiya tamilan kaividamattan endra nambikaiyudan uyir thappi vandharkal.manamula tamizhnai erupin karam neetuvom...ellayel manduviduvathu mel....sariya? maha
நாம் ஒவ்வொருவரும் இப்படி இனஉணர்வோடு செயல்பட்டால் நிச்சயம் தமிழிழம் மலரும். தங்களின் வேண்டுகோள் எல்லா தமிழர்களையும் சென்றடைய இறைவனை பிரார்த்திகிறேன் மகாலட்சுமி. வாழ்கவளமுடன்.
Post a Comment