"இறைவனிடம் என்ன வேண்ட வேண்டும்?" - வள்ளலார் சொல்லிக் கொடுத்தது
ஒரு முறை அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரிடம் அவருடைய குரு பின்வருமாறு வினவினார்:
"இராமலிங்கம்! நீயோ முற்றும் துறந்த துறவி. இருப்பினும் இறைவனை ஓயாமல் வேண்டிக் கொண்டே இருக்கிறாய். அப்படி இறைவனிடம் ஓயாமல் என்ன தான் வேண்டுவாய்?"
இதற்கு உடனே அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமான் பின்வரும் பாடலை பதிலாகப் பாடினார்கள்:
ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்தம் உறவு கலவாமை வேண்டும்
பெருமைமிகு நின் புகழ் பேசியிருக்க வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மரு°உ பெண்ணாசை மறக்கவே வேண்டும்
உன்னை நான் மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள்
வளர் தலமோங்கு கந்த வேலே
தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முக தெய்வ மணியே!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்தம் உறவு கலவாமை வேண்டும்
பெருமைமிகு நின் புகழ் பேசியிருக்க வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மரு°உ பெண்ணாசை மறக்கவே வேண்டும்
உன்னை நான் மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள்
வளர் தலமோங்கு கந்த வேலே
தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முக தெய்வ மணியே!
இனி தன்னலமின்றி நாம் அனைவரும் இறைவனிடம் இதையே வேண்டுவோமா?
No comments:
Post a Comment